நியூசிலாந்து பள்ளிவாசலில் மேற்காள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியே இலங்கையில் நடந்த தாக்குதல்!

136shares

நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கையில் உள்ளூ அடிப்படைவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது,

நியூசிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பழி தீர்க்கும் வகையில்லேயே இந்த தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது. பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த வித முன்னறிவித்தலும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு துறை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என் வகையில் நானோ பிரதமரோ தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. இப்படியான அடிப்படைவாத இயக்கங்களின் சொத்துக்கள் அரசடமையாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

.

இதையும் தவறாமல் படிங்க