மேற்குலகப்பிடியில்…சிறிலங்காவின் புலனாய்வு! விலையும்…விபரீதமும்!!

  • Prem
  • April 24, 2019
384shares

இலங்கையில் நடத்தப்பட்ட ஐ. எஸ்ஸின் தாக்குதல்கள் அரசியல் பொருளாதார நிலையில் பலவீனமாக உள்ள அந்தத்தீவுக்கு மிகப்பெரிய அடி.

இந்த அடியின் நீட்சிகள் பாதுகாப்புக்காரணங்களை காரணம்காட்டி இலங்கை அனைத்துலக அரங்கில்உள்ள பெரிய நாடுகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறும் நிலையை உருவாக்கிவிட்டது.

அமெரிக்கா இந்தியா பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு உட்பட்ட முக்கிய புலனாய்வுமையத்தலைகளின் பிரசன்னம் அந்தத்தீவில் திமுதிமு எனக்குவியும் அறிகுறிகள் வெளிப்டுகின்றன

இது இலங்கையர்கள் மீதான முழு அக்கறையினால் வெளிப்படும் நகர்வு என்பதற்கு அப்பால் பூகோள அரசியல் கேந்திரத்தில் தமக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் ஐ.எஸ் முத்திரை பதிக்கப்படுவது மேற்குலகு முதல் சீனா வரையுள்ள இந்து சமுத்திர நலன்களின் அடி மடியில் கைவைக்கும் நகர்வு கூட.

இதையும் தவறாமல் படிங்க