ஐ. எஸ் ஏன் இலங்கையை தெரிவு செய்தது? பரிஸ் முதல் கொழும்புவரை ஒரே வெடிமருந்து!

  • Prem
  • April 25, 2019
681shares

ஐ.எஸ் அமைப்பின் கொடுரமான -குருரமான முத்திரைகள் ஏற்கனவே உலகம் அறிந்து முத்திரை. 2015 இல் பரிஸ்நகரில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள், 2016 இல் பிரெசெல்சில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் 2017 இல் பிரித்தானியாவின் மஞ்செஸ்டர் அரினாவில் தாக்குதல் போன்ற நாசகாரங்கள் எல்லாம் இந்த வகைதான்.

அதிலும் வெடிபொருட்களைஇனங்காணும்; சோதனைக்கருவிகளால் இலகுவில் கண்டுபிடிக்கமுடியாத Mother of Satan அல்லது சாத்தானின் அன்னை என்ற விளிப்புக்குரிய TATPஎனப்படும் வலுமிகுந்த றைஏஸ்ரோன் பேரொக்சைட்( Triacetone peroxide ) வெடிமருந்தை கொண்டு இந்த தாக்;குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த வெடிபொருளும் ஒரு ஐ.எஸின் நாசகார முத்திரைதான். இப்போது இலங்கையிலும் அதேரக நாசகாவெடிபொருள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்படியொரு ஐ.எஸ் முத்திரை பதிக்கப்படக்கூடும் என்ற ஊகம் கடந்த ஈஸ்டர் தினத்துக்கு முன்னர் இல்லாவிட்டாலும் இப்போது தனது அமைப்பின் அனைத்துலக இருப்பு குறித்த செய்தியை இலங்கையில் ஐ.எஸ் கூறியுள்ளது.

இது முழுமையாக இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு மட்டும் உரிய செய்தியல்ல. மாறாக இது அனைத்துலகத்துக்கும் உரிய செய்தி.

கடந்த மார்ச் 22 ஆந்திகதியன்று சிரியாவில் இருந்து ஐ.எஸ்ஸின் ராஜ்யம் அகற்றப்பட்டதாக, அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப் உலகத்துக்கு ஒரு செய்தியை அறிவித்தார். அவரது செய்தி வழங்கப்பட்டு சரியாக ஒருமாதத்தின் பின்னர் அதாவது ஏப்ரல் 21 இல் எமது இருப்பு இன்னமும் உள்ளது என்ற செயதியை இலங்கையில் இருந்து ஐ.எஸ் வழங்கியுள்ளது.

பொதுவாக ஐ.எஸ் அல்லது அல்ஹைடா போன்ற அமைப்புகளின் செய்ற்பாடு எல்லைதாண்டிய செயற்பாடுகளுக்குரியவை அந்த வலையமைப்பு வெகுநுட்பமாக ஆயுதங்கள் நிதி மற்றும் உறுப்பினர்களை இன்றும் உலகின் அரைவாசிப்பகுதிக்கு கடத்தும் வலுவைக்கொண்டுள்ளது.

எந்த ஒரு நாட்டில் உள்ளுர் புலனாய்வுத்துறைகட்மைப்பு , ஐ.எஸ் ஆகிய தமது அமைப்பின் தாக்குதல்களை தடுக்கும் வகையில் தயாராக இல்லையோ அங்கு தனது குவியமிடலை அது செய்யும். இலங்கையிலும் இதுதான் நடந்தது

ஐ. எஸ்போன்ற அமைப்பு குறிப்பிட்ட ஒருநாட்டில் டீரளiநௌள அழனநட எனப்படும் வணிகமாதிரி செயற்பாடுகளையும் உருவாக்கி தனது உறுப்பினர்களை உருமாற்றி உள்ளுர் உறுப்பினர்கள் சிரமமின்றி போஷிக்கப்;படும் நுட்பத்தையும் பிரயோகம் செய்வதில் திறமையை கொண்டுள்ளது. கொழும்;பு சங்ரிலா விடுதியில் வெடித்த தற்கொலை குண்டுதாரி வெல்லம்பிட்டியில் நடத்தபட்ட ஒரு தொழிலகத்துடன் என்றவிடயத்தை கவனித்தால் இதன் ஆதாரம் புலப்படும்.

சிறிலங்காவின் புலனாய்வுத்துறை 2009 கடந்து 10 வருடங்களாகிவிட்டாலும் இப்பொதும் பழைய புலிபூச்சாண்டி கருத்தியலில்தான் சுழல்கிறது. வடக்கில் ஏதாவது ஒரு அறவழிப்போராட்ம் நடந்தால் உடனயாகவே தமது கமராக்கறுடன் ஓடி அந்த அப்பாவிகளை வெருட்டும் வகையில் சுற்றிச்சுற்றி படம் எடுப்பதில் அவர்களின் சுப்பர் இன்ரலியன்ஸ் உள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் அமைப்பு உறைநிலைப்பட்டு 10 வருடங்கள் ஆகியும் பழைய புலிபூச்சாண்டி இன்ரலியன்ஸ் இன்னமும் தொடர்கிறது. ஆனால் ஜ.எஸ் கொழும்புக்குள் சாகாசமாக உலாவந்துள்ளது

இலங்கையில் இதுவரை 359 பேரை ஐ.எஸ் பலிவாங்கி அந்ததீவை பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.எனினும் இந்தத்தாக்குதல்கள் குறித்து உள்ளுரில் வெறும் அவல்மெல்லுதல்கள ;இடம்பெறுகின்றன.

தாக்குதல் சாத்தியங்களுக்குரிய புலனாய்வுத்தகவல்கள் தனக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என மூக்கால் அழும் சிறிலங்காவின் முதன்மைத்தலையாரி மைத்திரி நாட்டின் பாதுகாப்பு பிரிவு மற்று புலனாய்வு பிரிவிலும் அதிரடிமறுசீரமைப்பைசெய்யமுனைகிறார்.

இந்த மறுசீரமைப்பில் தனக்குத்தான் பாதுகாப்பு அமைச்சுக்கிட்டும் என சிங்களத்தின் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கணக்குப்போடுகிறார். அது போல இன்னொரு மது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்க தேவையில்லை என மடியில் கனமுள்ள மஹிந்தவும் அந்தரப்பட்டார் அத்துடன் வெளிநாடுகளில்; நிதிசேகரித்தால விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை.

புலிகளுடன் ஒடுக்கிய போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவில்இப்படி ஒரு பெரிய தாக்குதல் நடந்துவிட்டதே எனவும் அவர் உச்சுக்கொட்டினார். இவ்வாறான அதிர்வுகள் குதிரை ஓடியபின்னர் லாயத்தைப்பூட்டும் நகர்வுகள்.

ஆயினும் இப்படி அவல் மெல்லுவதை தவிர கொழும்பு அதிகாரமையத்துக்கும் வேறுவழி இல்லை. சிறிலங்காவின் இந்தக்கையறுநிலை தெரிந்தபடியால்தான் ஐ.எஸ் அமைப்பின் நகர்வுகளை கையாளும் 7 நாடுகள் இப்போது இந்த விடயத்தில் மிகத்தீவிரமாக கால்பதித்துவிட்டன.

ஏற்கனவே அமெரிக்காவின் எப்.பி.ஐ பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு உட்பட்ட முக்கிய புலனாய்வுமையத்தலைகளின் பிரசன்னம் இலங்கைக்கு வந்து விட்டது.

இது இலங்கையர்கள் மீதான முழு அக்கறையினால் வந்த நகர்வு என்பதற்கு அப்பால் பூகோள அரசியல்கேந்திர முக்கியத்துவத்துடன் தொடர்புடைய நகர்வு.

தற்பொது இலங்கையில் ஐ.எஸ் முத்திரைபதிக்கபட்டுள்ளமை மேற்குலகுமுதல் சீனாவரையாக மையங்கள் கொண்டுள்ள இந்துசமுத்திர நலன்களின் அடிமடியில் கைவைக்கும் நகர்வு கூட. ஏனெனில் இப்போதெல்லாம் இலங்கை துறைமுகங்களில் பலநாடுகளின் பெரும் போர்கப்பல்கள் எல்லாம் நிம்மதியாக இளைப்பாறிச்செல்வது தெரிகின்றது.

இதனால் சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்ததோ இல்லையே மேற்குல நாடுகளின் முக்கிய புலனாய்வு மையங்களின் பிரசன்னம் நிதர்சனப்பட்டேயாகும். இந்தவிடயத்தில் தமது வலிந்த ஒத்துழைப்புகளை பெறுவதற்கு ஒருவேளை ஆட்சித்தலைமைகள் முரண்டுபிடித்தால் ஆட்சிமாற்ற அகற்றுதல்கள் வரை மேற்குலக சக இந்தியவலிமை பாயக்கூடும். ஆனால் கொழும்பு அதிகாரமையத்தின் தற்போதைய கும்புடுதலை நோக்கும் போது அதுவே சரணடைந்து விட்ட நிலைதெரிகிறது.

இதையும் தவறாமல் படிங்க