ஐ.எஸ் இலக்கின் பின்அதிர்வு! பொருளாதார அடியில் இலங்கை!!

209shares

இலங்கைத்தீவில் மக்களை பலியெடுத்த நாசகாரிகள் உள்ளுரில் தமக்காக கொண்டிருந்த பொருளாதார பின்புலம் ஆச்சரிப்படவைக்கின்றன.

இந்;த நாகாரிகளின் வங்கிக்கணக்கில் 140 மில்லியன் ரூபாய் இருந்தது அதற்கும் அப்பால் அந்த வலையமைப்புக்கு 7 பில்லியன் சொத்துக்கள் இருந்தன. ஆனால் அவர்கள் வைத்த நாசகார இலக்கின் அதிர்வுகளால் இலங்கைத்தீவின் பொருளாதாரநிலை அடிவாங்கிவிட்டது.

இலங்கை ரூபா மீண்டும் வீழ்ந்தது. ஐந்தரை வருடங்களுக்குப் (2012 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆந்திகதி) பின்னர் பின்னர் இந்த வார முற்பகுதியில் பங்குச்சந்தைகளும் மிகமோசமான அடிமட்ட நிலைக்கு ஆட்டம் கண்டன. கடன்பட்டார்நெஞ்சம் போல ஏற்கனவே கடுமையான கடன் கலக்கத்தில் இருக்கும் இலங்கைக்கு இவையாவும் சமகால பொருளாதார அடிகள்.

சிறிலங்கா பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த சுற்றுலாத்துறை இப்போது பாம்பு ஏணி ஆட;டத்தில் சடுதியாக பாம்பின் வாய்க்குள் போன காய்போல இறங்கிவிட்டது. அண்மைய தாக்குதல்களுக்குப் பின்னர் 7.5 வீதமான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் சடுதிவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் உல்லாசப்பயண முன்பதிவுகள் மீளெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க