இன்று பதவியேற்றார் புதிய சட்ட மா அதிபர்!

26shares

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, எச்.எம்.காமினி செனெவிரத்ன உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும், கே.ஜீ.அசோகா அலவத்த ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களையும் பெற்றுக்கொண்டனர் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க