நாளை மறுதினம் நாட்டில் இடம்பெறவுள்ள தாக்குதல்? சிறுவர்களுக்கான பாடசாலை ஆரம்ப நாளில் விஷவாயு தாக்குதல்?

3373shares

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறையும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது மறுபக்கம் 13ஆம் திகதியான நாளை மறுதினம் விஷ வாயுத் தாக்குதல் நடக்கலாம் என்று ஒரு தகவல் நேற்றைய தினம் பரவலாக கசிந்தது.

நாட்டில் உண்மையில் என்னதான் நடக்கின்றது? என நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளார்.

நாளைமறுதினம் திங்கட்கிழமை தரம் 1 முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன என அரசு அறிவித்துள்ளது. ஆனால், அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கல்வி கற்கும் நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமை.

சிறுவர்களுக்கான பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு ஒரே குரலில் சொல்ல வேண்டும். 19ஆவது திருத்தத்துக்குப் பின்னர் இப்போது இரு பிரிவுகளாகச் செயற்படும் அரசியல் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருந்து உண்மையைச் சொல்ல வேண்டும்.

எதிர்வரும் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை தெரிவித்துள்ள அதேவேளை மறுபக்கம் விஷவாயுத் தாக்குதல் நடக்கலாம் என ஒரு தகவல் நேற்று உலாவியது.உண்மையில் என்னதான் நடக்கின்றது? என நாடாளுமன்றில் மஹிந்த கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க