நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை! ஜனாதிபதியால் மட்டுமே முடியும்!

498shares

கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் நேற்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் பதவி நீக்கப்பட வேண்டும், கிழக்கு மாகாண மக்களை நேசிக்கும் ஒருவரை அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என கோரியே கிழக்கினைப் பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு எதிராக யார் ஹர்த்தால் மேற்கொண்டாலும் அதற்கு அச்சமடையப் போவதில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளதோடு, ஜனாதிபதியை தவிர வேறு யாராலும் என்னை பதவியிலிருந்து நீக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என எனக்கு நன்கு தெரியும். தமிழ் மக்கள் சிலர் பொதுஜன பெரமுன கட்சியினை பிடித்துக் கொண்டு ஹர்த்தால் செய்கின்றனர்.

யார் ஹர்த்தால் செய்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. என்னை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் அவ்வாறு நீக்குவதற்கு உரிய காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.

கந்தளாய் நகரில் கடைகள் மூடப்படும் நாள் ஒன்றை பிடித்துக் கொண்டு இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க