கைப்பற்றப்படும் ஆயுதங்களை காட்ட வேண்டாம் என சட்டம் இல்லை! மனோ கணேசன்

39shares

கைப்பற்றப்படும் ஆயுதங்களை ஊடகங்களில் காட்ட வேண்டாமென ஒரு வேண்டுகோளை மாத்திரமே அரசாங்கம் விடுத்துள்ளதாகவும், அது சட்டமாக கொண்டுவர வில்லையெனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல ஊடகங்களும் தமக்கு சுய கட்டுப்பாடொன்றை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் சிறுபிள்ளை போன்று செயற்பட்டு, எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்று நடந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கைப்பற்றப்படும் ஆயுதங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் குறித்து சகோதர ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க