ஐ.எஸ். அமைப்பின் இலங்கை உறுப்பினர்களின் 60 பேரின் விபரங்கள் சஹ்ரானின் கணனியில்!

98shares

ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இஸ்லாமிய அரசு அமைப்பின் இலங்கை உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பின் வலையமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்த 60 பேர் தொடர்பான சகல தகவல்களையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

நுவரெலியா பிரதேசத்தில் மொஹமட் சஹ்ரான் ஹசிம் நடத்தி வந்த பயிற்சி நிலையத்தில் அண்மையில் கைப்பற்றிய கணனியில் இருந்து இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. கணனியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களினால் நாடு முழுவதிலும் முப்படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க