நாத்தாண்டிய வன்முறையில் வெட்டி கொல்லப்பட்ட நபர்!

644shares

தென் இலங்கையில் நாத்தாண்டியவில் தற்பொழுது நடைபெற்று வருகின்ற வன்முறைச் சம்பவங்களில் ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது.

கொல்லப்பட்டவர் 45 வயதுடைய பௌசில் அமிர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு சற்று முன்னர், நாத்தாண்டியவில் உள்ள, 'இயலமோதர' பகுதியில் வன்முறைகள் கட்விழ்த்துவிட்டிருந்த கும்பல், முஸ்லிம் பள்ளிவாசலுக்கு எதிரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட முஸ்லிம் குடும்பஸ்தர் தச்சுவேலை செய்பவர் என்றும், பலமாகத் தாக்கப்பட்டும், வாள்களினால் வெட்டப்பட்ட நிலையிலும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மரணமடைந்ததாகத் தெரியவருகின்றது.

இதையும் தவறாமல் படிங்க