களமுனையில் ரணில்!! வெசாக்கை யாரும் குழப்ப முடியாது என்று சவால்!

280shares

நேற்று குளியாப்பிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள், வீடுகள் மீது சிங்களக் காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களுக்கு சிறிலங்காவின் பிரதமர் ரனில் விக்ரமசிங்க இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

குளியாபிட்டிய நகரில் தாக்குதலுக்கு இலக்கான பள்ளிவாயிழலை பார்வையிட்ட நிலையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்.....

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தி அந்த கொண்டாடட்டங்களை குழப்பியடித்தனர். அதேபோல் இங்குள்ள வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வெசாக் கொண்டாட்டங்களை குழப்பியடிக்க இடமளிக்க முடியாது. நேற்றைய தினம் அமைச்சர்களின் கூட்டத்தின் போது இது தொடர்பில் தீரி்மானத்தையும் நிறைவேற்றினோம். அதற்காக இந்த குழப்பங்களை தடுத்து அமைதியை பாதுகாக்கத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் பொலிசாருக்கும்,இராணுவத்தினருக்கும் வழங்கியுள்ளோம். முப்படைத் தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் இது தொடர்பில் நேற்றைய தினம் அறிவித்தல்களையும் விடுத்திருந்தனர். அப்பாவி மக்களை துன்புறுத்தி வெசாக் கொண்டாட்டங்களை குழப்பியடிக்க இடமளிக்க ஒருபோதும் முடியாது. இம்முறை வெசாக் பண்டிகையை அமைதியாக நடத்த வேண்டியது அவசியம். தேவைப்படும் இடங்களின் பாதுகாப்பிற்கு பொலிசாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பை வழங்குபவர். அதனால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிசாருக்கும், முப்படையினருக்கும், விசேட அதிரடிப்படையினருக்கும் தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்”.

இதையும் தவறாமல் படிங்க