உடல் முழுதும் கறுப்பு நிறத்தைக்கொண்ட இராணுவம்; பிள்ளைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்? பதைபதைக்கும் தாய்

623shares

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலைக்கு அரசே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினர் உருமறைப்பில் பாதுகாப்புக் கடமைகளில் தற்போது ஈடுபட்டிருப்பது, தமிழ் மக்கள் மத்தியிலும், பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பலத்த பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததாக யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட கனகராயன்குளம் தாவூத் உணவக உரிமையாளர் சிறையில் சகல வசதிகளுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கறுத்த துணியைக் கட்டி, கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு, தொப்பியும் அணிந்து எமது வாகனங்களை வழிமறிக்கும்போது எங்களுடைய மனங்களே பதைக்கின்றது என்றால், பள்ளிக்கூடப் பிள்ளைகள் எவ்வாறு ஒரு நல்ல மனநிலையில் போயிருந்து, இராணுவத்தைக் கடந்து கல்விகற்கப்போகிறார்கள் என தாய் மனம் ஏங்குகின்றது.

இப்படியான சூழலுக்குள்ளே மீண்டும் எமது பிள்ளைகள் போய்விட்டார்கள் என்ற வேதனையோடு, இதிலிருந்து எவ்வாறு இந்த நாடு மீளப்போகின்றது என்று தெரியவில்லை. ஆனாலும் இத்தகைய ஒரு குற்ற நிலைக்கு, இத்தகைய ஒரு பதற்றமான பயங்கரவாத நிலைக்கு இந்த அரசுதான் பொறுப்பு.

இந்த யுத்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்காததற்கு கிடைத்த பதிலைத்தான் இன்று அவர்கள் அனுபவிக்கின்றார்கள். தங்களுடைய அரசியல் இருப்புக்களைத் தக்கவைக்கவேண்டும் என்பதற்காக, குற்றவாளி என்று தெரிந்தும் இவன் படுகொலை செய்தவன், இவன் தமிழினத்தை படுகொலை செய்தவன், அதற்கான சூழ்ச்சி செய்தவன் என்பதைத் தெரிந்தும் அந்தக் குற்றவாளிக்கூண்டில் அவர்களை ஏற்றாது இருந்த அதே குற்றத்தை இன்றைய அரசு, இன்றும் செய்துகொண்டிருக்கின்றது.

இன்றும் எத்தனையோ அமைச்சர்கள், அரசியல்வாதிகள் இந்த படுபயங்கரவாதச் செயலுக்கு, சூழ்ச்சிக்காரராக இருந்திருப்பார்கள் என்ற சந்தேகங்கள் உள்ளன. அதைச் சரிப்பட ஆராயாது, அவர்கள் இன்றும் தங்களுடய அரசியலைத் தக்கவைப்பதற்காக விட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

இதே ஒரு அடாவடித் தனத்தை தமிழ் மக்கள் பிரதிநிதி செய்திருந்தால் அவர் எப்போதோ குற்றவாளிக்கூண்டில் இருந்திருப்பார்.இன்னுமொரு நல்ல உதாரணம் இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தலைவர் பிரபாகரனது படத்தை வைத்திருந்தார்கள் என்பதற்காக இன்று சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால் இதே கனகராயன்குளம் வீதியிலே தாவூத் உணவகம் என்னும் உணவகத்திலே, கடந்த 29ஆம் திகதி வாள்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அந்த உணவகம் மீள இயங்குகின்றது. அந்த உணவக முதலாளி அங்கு சிறையிலே எல்லா வசதிகளோடு அவர் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றார் என ஊடகங்களிலே அறியக்கிடைக்கின்றது.

இதுவெல்லாம் ஒரு அரசியல் பின்னணியாகும். எவன் எக்கேடுகெட்டாலும் பறவாயில்லை, நாடு குட்டிச்சுவரானாலும் பறவாயில்லை, தங்களுடைய அரசியல் இருப்பிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் இப்பொழுதும் நகர்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்ற இந்த வேதனைதான், எங்களை மீண்டும் படு பாதாள குழிக்குள் சென்றுவிட்டோம் என்ற வேதனையாகவிருக்கின்றது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்