மட்டக்களப்பு ஏறாவூர்ப் பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்! உரிமையாளருக்கு தொடர்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

614shares

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது என்று உரிமையாளர் ஏ.எஸ்.எம்.நௌஷாத் என்பவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொடருந்து கடவைக்குஅருகாமையிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதே மூவரடங்கிய குழுவினர் பெற்றோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காரின் உரிமையாளர் தெரிவிக்கையில்,

தீக்கிரையாக்கப்பட்ட காரின் உரிமையாளர் தனக்கு கடந்த மாதமிருந்தே கைப்பேசியில் எச்சரிக்கைக் குறுஞ்செய்திகள் வரத்துவங்கியதாகவும் இது பற்றி ஏப்ரில் 25ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

கடைசியாக செவ்வாய்க்கிழமை மாலை 4.10 அளவிலும் எனது மனைவியைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தல் குறுஞ் செய்தி கைப்பேசிக்கு வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தினால் கார் முற்றாக எரிந்துள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்