வடக்கில் வாழும் அனைத்து மக்களது வீடுகளிலும் கஞ்சியை சமைக்க கோரிக்கை!

1027shares

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உணவின்றி தமிழ் உறவுகள் பட்ட அவலங்களை நினைவுபடுத்தி வடக்கில் வாழும் அனைத்து மக்களும் தமது வீடுகளில் கஞ்சியை சமைக்குமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மே 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இந்த செயற்பாட்டை முன்னெடுக்குமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் வலியுறுத்தியுள்ளார்.

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18 ஆம் திகதி காலை 10.30 அளவில் அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான முதற்கட்ட ஆயத்த பணியாக முள்ளிவாய்க்கால் முற்ற வளாகத்தில் நேற்று மாலை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என்று ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை முள்ளிவாய்கால் நினைவுத்தூபிக்கு முன்பாக ஒன்று கூடிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர், மதகுருமார்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் இணைந்து சர்வமத வழிபாடுகளை அடுத்து தமது சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நிகழ்வில் அழைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த ஏற்பாட்டு குழுவினர், அந்த நிகழ்விற்கு வருகைதரும்போது பொதிகளை எதனையும் எடுத்து வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்