மஹாசொன் பலகாய இயக்க தலைவர் விளக்கமறியலில்!

63shares

தெல்தெனிய பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மஹாசொன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவை விளக்கமறியலில் வைக்க இன்றைய தினம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் கடந்த வருடம் திஹன கலவரத்திற்கு தலைமை தாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க