கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய தற்கொலைத் தாக்குதல் -முக்கிய சூத்திரதாரி சிக்கினார்!

133shares

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக மொஹமட் ஆதம் என்பவர் கைதாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தநபர் இன்று (புதன்கிழமை) புதிய காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கான வாகனத்தை கொள்வனவு செய்ததுடன், அதன் இருக்கைகளையும் அமைத்துக் கொடுத்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்தநபரின் நான்குவகை படங்களை பொலிஸார் நேற்றுமுன்தினம் வெளியிட்டு இவர் தொடர்பான தகவல்களை அளிக்குமாறு பொதுமக்களிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க