குளியாப்பிட்டி வன்முறை சம்பவங்களை தடுக்கத் தவறிய பொலிஸ் அத்தியட்சகருக்கு ஏற்பட்ட நிலைமை!

150shares

குளியாப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகருக்கு இன்றுமுதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் இன்று (புதன்கிழமை) முதல் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நுகேகொடை பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவுக்கு அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமையும் குளியாப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குளியாப்பிட்டிப் பொலிஸ் அத்தியட்சகர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையிலேயே இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச்சம்பவங்களில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த வன்முறைச்சம்பவங்களை அடுத்து தொடராக இடம்பெற்ற சம்பவங்களால் நாடளாவிய ரீதியில் ஊடரங்குச்சட்டம் இரவு வேளைகளில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க