இனவன்முறைகளின் பின்புலத்தில் அதிகாரம்மிக்க தரப்பு!

124shares

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகளின் பின்னால் அதிகாரமிக்க தரப்பொன்று இருப்பதாக தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன அந்தத் தரப்பு யார் என்பது விரைவில் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் மாத்திரமன்றி எதிர்கட்சித் தலைவரும் இணைந்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மேசாமான நிலமைகளை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவிக்கையில்

“நாட்டில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறும் பட்சத்தில் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கென படைத்தரப்பை ஈடுபடுத்த வேண்டும். இதனால் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இவ்வாறான வன்முறைகள் நடைபெறுவது நல்லதல்ல. முஸ்லிம் மக்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள். உண்மையில் இந்த தீவிரவாதிகள் தொடர்பில் பல தகவல்களை அவர்களே வழங்கினார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது நல்லதல்ல, இதன் பின்னணியில் அதிகாரம் படைத்த தரப்பொன்று இருப்பது தெளிவாகப் புரிகின்றது. குழுவாக இணைந்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசியல் இலாபத்தை தேட முயற்சிக்க வேண்டாமென நாம் கேட்கின்றோம். அவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணைகளில் தெரியவரும். இந்த நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்” என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய,

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளால் நாடு சர்வதேச அரங்கில் பெரும் தலைகுனிவை சந்தித்துள்ளதாக கவலை வெளியிட்டார்.

கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பிரஜை என்ற வகையிலும், சிங்கள, பௌத்தர்கள் என்ற வகையிலும் நாம் வெட்கப்படுகின்றோம். சிங்கள மக்கள் பணியாற்றுகின்ற இடங்களைக்கூட, முஸ்லிம்களுக்கு உரியது என தெரிவித்து தீக்கிரையாக்கியுள்ளனர். அதனைவிட சாதாரண முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சர்வதேச ரீதியில் நமக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு ஜுலைக் கலவரத்தின்போது இடம்பெற்ற சம்பவங்களுக்கு இன்னமும் நாம் நட்டஈட்டை செலுத்திக்கொண்டிருக்கின்றோம். அதே போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் தோன்றுகின்றது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். விசேடமாக ஜனாதிபதி, பிரதமர் அதனைவிட விசேடமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு இதில் விசேட பொறுப்புள்ளது. அவர்கள் மூவரும் இணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த செயற்பட வேண்டும்.

1989ஆம் ஆண்டு இளைஞர்களின் எழுச்சி ஏற்பட்ட அந்த சந்தர்ப்பத்தில் சகல அதிகாரங்களும் பொருந்திய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்து ஆராயப்பட்டது. அதேபோல் ஒரு குழுவை அமைத்து இந்த சம்பவம் தொடர்பிலும், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை தடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இதுத் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்