உங்கள் பிள்ளைகளாக இருந்தாலும் காட்டிக்கொடுப்பதில் பின் நிற்காதீர்கள்

122shares

இஸ்லாம் மதம் பணமாக மாறியதன் விளைவாகவே குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி - கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் இருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் விழிப்பாக இருக்க வேண்டும்.

விழிப்பாக இருக்க தவறிய காரணத்தினாலேயே இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இல்லாமிய பயங்கரவாதம் எனப்படும் ஐ.எஸ் அமைப்பு வெளிநாட்டில் கூலிக்கு மாரடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

நடந்து முடிந்த மனித படுகொலைக்கு யார் காரணம் என்பதை நீங்கள் கண்டுள்ளீர்கள். எமது பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக யாராவது இருந்தால் உடனடியாக தகவல் கொடுங்கள்.

அது உங்கள் பிள்ளைகளாக இருந்தாலும் காட்டிக்கொடுப்பதில் பின் நிற்காதீர்கள் என்று அமீர் அலி தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க