மரணித்தவர்களை நினைவு கூர எந்த சட்டமும் தடைவிதிக்க முடியாது!

58shares

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18 ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில், மரணித்தவர்களை நினைவு கூருவதற்கு எந்த சட்டமும் தடைவிதிக்க முடியாது என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை காரணம் காட்டி பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்கு அரசாங்கம் தடைவிதித்தாலும், படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

தமிழின படுகொலை நினைவு வாரத்தின் நான்காவது நாள் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் முன்றலில் உள்ள தமிழாராட்சி மாநாட்டு நினைவிடத்தில் நினைவு கூரப்பட்டது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 12 ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா, கிளிநொச்சி , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே இன்று நான்காவது நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டன.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த 9 உறவுகளின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் அஞ்சலி செலுத்தியதோடு உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக நினைவுச் சுடர்களும் ஏற்றி வைக்கப்பட்டன.

இதேவேளை தமிழின படுகொலை நினைவு வாரத்தின் நான்காவது நாள் நிகழ்வுகள் காலை 10.30 அளவில் நெடுந்தீவிலும் 2 மணிக்கு அல்லைப்பிட்டியிலும் 3 மணிக்கு வீரசிங்கம் மண்டப வளாகத்திலும் 5 மணிக்கு பருத்தித்துறை கடற்கரையிலும் 7 மணிக்கு வல்வெட்டித்துறையிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்