மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் மதச்சாயம் பூச வேண்டாம் பெற்றோர்கள் ஆதங்கம்!

90shares

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலையை தொடர்ந்து ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை கடந்த (13) திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டின் அரச புலனாய்வு அறிக்கை மற்றும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் பாடசாலைகளில் விச வாயு தாக்குதல் நடைபெறக்கூடும் என எச்சரிக்கை விட்டதை தொடர்ந்து பாடசாலைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு குழுக்களும் அமைத்து பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என சகலரும் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் வித்தியாலயத்தின் மூன்று பெண் ஆசிரியைகளும்

அன்றைய தினம் ஹபாயா அணிந்து வந்ததை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க பாதுகாப்பு குழுவால் மத ரீதியான பிணக்குகள் ஏற்படாவண்ணம் தனியான அறையில் பரிசோதிக்கப்ட்டனர்.

இச் சம்பவத்தை தொடர்ந்து மூன்று பெண் ஆசிரியைகளும் தற்காலிகமாக இடமாற்றம் பெற்றிருப்பதாக வலயக்கல்வி பணிப்பாளர் பாடசாலை தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த தற்காலிக இடமாற்றத்திற்கு பதிலீட்டு ஆசிரியர்கள் வழங்காமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்களும் மாணவர்களும் விசனம்தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞானம், தமிழ், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பிரதான பாடத்திற்கான ஆசிரியர்களின் இடமாற்றத்தின் பின்புலத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதியின் செயற்பாடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் கா.போ.த. சாதாரண தரம், பத்தாம் தரத்திற்கு கல்வி கற்பிக்கும் மாணவர்களுக்கு பதிலீட்டு ஆசிரியர்களையே பெற்றோர் கோருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க