உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் எவை? ஆரம்பமானது விசாரணை

48shares

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனையடுத்த குண்டு வெடிப்புக்களு க்காக பயங்கரவாதக் குழுக்களால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை யொன்றை ஆரம்பித்துள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி விசாரணைகளுக்காக குண்டுவெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரி க்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ. வெலியங்ஸ தெரிவித்துள்ளார். இதற்கிணங்க குண்டு வெடிப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தொடர்பில் இந்த வாரத்துக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு​ ரீ என் ரீ/ சீ போ மற்றும் ஆர். டீ. எக்ஸ் உள்ளிட்ட வெடி பொருட்களை பயன்படுத்திய போதிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் பரப்பப்படும் பல்வேறு வதந்திகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்திடமும் சமர்ப்பிக்கப்படவு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்