83 இனவன்முறைகளின்போது இருந்த நிலையில் இன்று தமிழ் மக்கள் இல்லை - மனோ கணேசன்!

580shares

'1977 மற்றும் 1983 ம் ஆண்டுகளில் இந்நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, கடை வீதிகள் பெருமளவில் எரிக்கப்பட்ட போது நாட்டின் அரசாங்க தலைவர்களே கலவரங்களை தூண்டி விட்டபோது, தமிழர்களாகிய எங்களுக்கு சென்று முறையிடக்கூட ஒரு இடம் இந்த நாட்டில் இருக்கவில்லை. இன்று நிலைமை அப்படியல்ல. அதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று, சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'தேசிய வழி' என்ற தொனிப்பொருளில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

ஓமல்பே சோபித தேரர் தலைமையில் பெருந்தொகையான பெளத்த தலைமை பிக்குகள் உட்பட பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள், சமூக நிறுவன பிரதிநிதிகள், கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா ஒரு பௌத்த நாடு என்று தெரிவித்திருக்கும் அமைச்சர் மனோ கணேசன், நடைமுறையில் உள்ள யாப்பை போன்று புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைமை பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி