முஸ்லீம்களுக்கு எதிரான இன வன்முறை ரணில் அரசாங்கத்தின் சதி!

109shares

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை அடுத்து முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கமே கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக மஹிந்த – கோட்டா விசுவாசிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலத்தின் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவிக்கையில்

வாள்கள் - ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகளவான முஸ்லிம் அரசியல்வாதிகள் அராசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களால் அழுத்தங்கள் ஏற்பட்டதை அடுத்து அரசாங்கம் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை ஊடகங்களில் காண்பிக்க தடை விதித்தது. இந்த விடயங்களில் இருந்து மக்களை திசை திருப்ப ஏனைய கைதுகளை முன்னெடுத்துள்ளது. அமைச்சர் மங்கள சமரவீர இந்த நாடு பௌத்த நாடு அல்ல என்று கூறியதும் இதற்காகத்தான். அவர் அவ்வாறு கருத்து வெளியிட்ட மறுநாள் வெளிஇடங்களில் இருந்து சென்ற குழுவினர் வன்முறைகளில் ஈடுபட்டனர். உதாரணமாக பண்டுகஸ்நுவர பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வெளியில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் யார் என்பது பண்டுவஸ்நுவர மக்களுக்கும் தெரியாது. சில இடங்களில் லொறிகளில் ஏறி வந்துள்ளனர். சீ.சி.டிவிகளை பார்த்தால் இலகுவில் அடையாளம் காண முடியும். இந்த சம்பவங்களை வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும் வீதியில் சென்ற கிராம மக்களையே பொலிசார் கைதுசெய்துள்ளனர். வெளியில் இருந்து வந்து குற்றமிழைத்தவர்களில் ஒருவர் கூட இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

இந்த சம்பவங்களை பொலிஸார் வேடிக்கை பார்த்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனே கூறியுள்ளார். அரசாங்கத்தின் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவுக்கு அமையவே பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் அவ்வாறு வேடிக்கை பார்த்துள்ளனர். அரசாங்கம் இன்னமும் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே இந்த சம்பவங்களை பயன்படுத்தி கொள்கின்றது. எஞ்சியுள்ள ஆறு மாதங்களாவது நாட்டுக்காக செயற்படுமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்'

இதேவேளை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையினரை ஸ்ரீலங்காவுக்கு வரவழைப்பதற்காகவே பிரதமர் ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டிய விமல் வீரவன்ச மேற்குலக நாடுகளுக்கு எமது நாட்டுக்குள் நுழைய அனுமதித்து ஸ்ரீலங்காவை கசாப்புக் கடையாக மாற்றிவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் இன்று மறக்கடிக்கப்பட்டு சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு இல்லை என்ற விடயம் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்ராஹிம் மகன்களை பயன்படுத்தி மேற்கொண்ட குண்டுத் தாக்குதலின் நோக்கத்தை இவர்கள் தற்போது நிறைவேற்றிக்கொண்டனர். பின்னர் அமைச்சர் மங்களவின் குழுவினரை பயன்படுத்தி முஸ்லிம்களின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தி அந்த நோக்கத்தையும் நிறைவேற்றிக்கொண்டனர்.

இன்று நாட்டில் உள்ள கிறிஸ்தவ முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து அவர்களை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையை ஸ்ரீலங்காவுக்குள் நுழைய வைப்பதற்கான முயற்சிகளாகவே இந்த செயற்பாடுகள் அனைத்தும் அமைந்திருக்கின்றன. எதிர்காலத்தில் மீட்டுக்கொள்ள முடியாத பாரிய குழிக்குள் நாட்டை தள்ளிவிடாது இந்த நாட்டை சூறையாட எதிர்பார்த்துள்ள சர்வதேச பிசாசுகளுக்கு நாட்டுக்குள் தலையீடு செய்து ஸ்ரீலங்காவை கசாப்புக் கடையாக மாற்ற இடமளிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேசத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் இந்த சதிகள் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தெரிந்தே நடைபெறுகின்றன. அதனால்தான் இந்த நிலையிலும் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுகின்றார். பிரதமர் அங்கும் இங்கும் வட்டமிடுகின்றார். நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டுக்கு தேவையான தலைமைத்துவம் தற்போது இல்லை என்று நாட்டு மக்கள் கூறிவருகின்றனர்' என்றார்.

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களின் மோசமான அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம் என்ற தலைப்பை பயன்படுத்திக்கொண்டு இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக மற்றுமொரு மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குற்றம்சுமத்தியுள்ளார்.

'தமது மோசமான அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம் என்ற பெயரை பயன்படுத்தி வருகின்றனர். தமது அரசியல்தேவைகளை நிறைவேற்றவும் பாவப்பட்ட அரசியல் நிலைக்கு உயிர்மூச்சு கொடுத்து தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இன்று நல்லிணக்கம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள நிலையை பார்க்கும் போது மற்றுமொரு தர்ஹா நகர் மற்றும் பேருவளை போன்ற சம்பவங்களை உருவாக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களுக்கு நல்லிணக்கம், நல்லாட்சி என்ற பெயரில் மீண்டும் அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமாகும். எனினும் நாட்டு மக்கள் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகவே எங்களுக்கு தெரிகின்றது. இன்று பிரதான அணியாக வளர்ந்துவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை இதில் சிக்கவைக்க பார்க்கின்றனர் என்றார்..

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய நபர்களுடன் நேரடித் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரவும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த மஹிந்தவாதி விமல் வீரவன்ச மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவும் இதற்கு கிடைத்திருப்பதாகவும் அறிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்