தற்கொலைத் தாக்குதல்களின் பின்னாலான அரசின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி!

33shares

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் ஆறு இடங்களை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பு மிகவும் பலமானதும் ஆபத்தானதுமாக இருக்கும் நிலையில் அதனை ஒழிக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையாக திருப்தியடைய முடியாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அநுர பிரியதர்ஷன யாப்பா, நாட்டின் அனைத்து புலனாய்வு கட்டமைப்புக்களையும் ஒருங்கிணைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் தற்போது உருவாகியிருக்கும் பயங்கரவாதத்தை இலகுவாக அழித்துவிட முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. இதில் பலர் தொடர்புபட்டுள்ளதுடன் பாரிய வலையமைப்பு என்பது தற்போது தெரிகின்றது. தற்கொலை குண்டு தாக்குதலில் சிலர் உயிழந்தாலும் அதற்கு உதவியவர்கள்,பணம் வழங்கியவர்கள் உள்ளிட்டவர்களை பாதுகாப்பு படையினர் கைதுசெய்து வருகின்றனர். இந்த நிலையில் புலனாய்வு அமைப்புகளை விரிவுபடுத்தி ஒன்றிணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் புலனாய்வுப் பிரிவு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று அவ்வாறு இல்லை. புலனாய்வுப் பிரிவினரை பலப்படுத்தாமல் இந்த பயங்கரவாதத்தை ஒருபோதும் அழித்துவிட முடியாது. வேறு விதத்தில் இதனை ஒழிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அது தொடர்பில் நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன்

கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமான புலனாய்வு பிரிவை கொண்ட இராணுவத்தை பயன்படுத்தாமல் புலனாய்வு துறையை பொலிஸாரை கொண்டு இயக்கியதால் புலனாய்வு துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை நான் கூறவில்லை. விசேட நிபுணர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம் அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுகிறது. இந்த பயங்கரவாதம் சர்வதேச பயங்கரவாதம் என்று பிரதமர் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கு சர்வதேசத்தின் ஆதரவு இருந்தாலும் ஸ்ரீலங்காவில் வளர்ச்சியடைந்த பயங்கரவாதம் என நாங்கள் பார்க்கின்றோம். குழப்பங்களை ஏற்படுத்துவதால் மட்டும் இதனை நிறுத்திவிட முடியாது. எனவே அனைவரும் அமைதியாகவும் ஐக்கியமாகவும் செயற்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும். இதனை அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். விசேடமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். தமது சமூகத்துக்கு இவர்கள் சரியான தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையாலேயே நாட்டுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்