காங்கேசன்துறை கடற்பரப்பில் சிக்கிய பெருமளவு கஞ்சா!

50shares

காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவரையும் இன்று மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும் மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் என கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பு ஊடாக படகில் வடமராட்சி கிழக்குக்கு கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்படுவர் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்