அஜந்தனுக்கு நட்டஈடு -அரசிடம் வலியுறுத்து!

137shares

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸார் இருவரின் படுகொலையுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத முன்னாள் போராளியான அஜந்தன் என்ற கதிர்காமதம்பி இராஜகுமாரனை கைதுசெய்து தடுத்து வைத்திருந்த அரசாங்கம் அவருக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று காலை நடத்திய ஊடக சந்திப்பில் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸாரின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான அஜந்தன் ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் அஜந்தனின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்ததாக துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்