குமுதினிப்படுகொலை 34 ஆம் வருட நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!

54shares

நெடுந்தீவு – புங்குடுதீவுக்கு இடையில் பயணிகள் படகு சேவையை நடத்திவரும் குமுதினிப் படகில் 1985ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைகளின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் நெடுந்தீவின் மகாவலித்துறையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா கடற்படையினரால் வெட்டியும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியும் அரங்கேற்றியிருந்த இந்த கொடூர படுகொலையின் போது குழந்தைகள்பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டதுடன் . முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாளான நேற்றைய தினம் இந்த படுகொலையை நினைவுகூரும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், பொது மக்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல்வாதிகள் ஆகியோர் கலந்துகொண்டு நினைவுத்துஸபிக்கு மலர் தூவி மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் தவறாமல் படிங்க