ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று!

119shares

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரரால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றில் கையளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற சபை முதல்வரான சபா நாயகரிடம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்படவுள்ளது.

அறுபது பேர் இதுவரை கையொப்பமிட்டுள்ள இந்த பிரேரணையில் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் குறித்த பிரேரணை நிறைவேறுவதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சியும் இருப்பதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இழுபறி நிலையிலேயே இருக்குமென அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க