பயங்கரவாதிகளின் வலையமைப்பு பற்றிய வரைபடம் வெளியானது!

760shares

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தொடர்பான கணனி வரைபடம் ஒன்றை சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் பெண் பயங்கரவாதிகள் மற்றும் சிறுவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த வரைபடத்தின்படி பயங்கரவாத வலையமைப்புக்கு முக்கிய தொழிநுட்ப உதவியாளராக பங்காற்றிய ஆதில் அமீஷ் என்பவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பயங்கரவாதிகள் பயன்படுத்திவந்த இரகசிய வீடுகள் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.

இதன்படி குறித்த பயங்கரவாதிகள் மொத்தம் 17 வீடுகளை இரகசியமாக பயன்படுத்திவந்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

கண்டி, நுவரெலியா, அம்பாந்தோட்டை, வண்ணாத்திவில்லு, மல்வானை, காத்தான்குடி, அழுத்பொல, வாழைச்சேனை, கட்டுவப்பிட்டி, சரிக்கமுல்ல, ஹெட்டிபொல, கொச்சிக்கடை, தழுவகொட்டுவ, கட்டுபொத்த, நிந்தவூர், சம்மாந்துறை, கல்கிசை ஆகிய இடங்களிலேயே குறித்த தீவிரவாதிகள் தங்கியிருந்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க