நான் உட்பட அமைச்சர்கள் எவரும் கருத்துக் கூறப்போவதில்லை! பெண்கள் உட்பட பலர் T.I.D; C.I.Dயின் கீழ்!

253shares

ஸ்ரீலங்காவில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில், 85 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்தரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான் உட்பட அமைச்சர்கள் எவரும் விசாரணைகள் தொடர்பான கருத்துக்களை கூறப்போவதில்லையெனவும், அது தொடர்பில் பொலிஸார் மட்டுமே கருத்துக்களை தெரிவிப்பார்கள் எனவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க