ஆட்சிக்கு வந்தால் சிறீலங்கா மீது ஆயுதத் தடை விதிக்கப்படும் ! பிரித்தானியாவின் எதிர்க்கட்சி சூளுரை!!

1026shares
பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சிறீலங்கா அரசுக்கான ஆயுத விற்பனைகள் அனைத்தும் தடை செய்யப்படும் என்று பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்கட்சியின் நிழல் நிதித்துறை அமைச்சருமான ஜோன் மக்டொன்ல் (John McDonnell) தெரிவித்துள்ளார்.

நேற்று 15.05.2019 புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா (Siobhain McDonagh) அவர்களின் அனுசரணையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் சிறீலங்கா ஆயுதப் படைகளுக்குப் பிரித்தானியாவால் வழங்கப்படும் பயிற்சிகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சியின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி (Emily Thornberry), நிழல் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் பிறீற் ஜில் (Preet Gill), நிழல் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் லிஸ் மக்இனெஸ் (Liz McInnes) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விரேந்திர சர்மா (Virendra Sharma), ஸ்டீபன் ரிம்ஸ் (Stephen Timms), லூக் பொலார்ட் (Luke Pollard), ஸ்ரெலா கிறீசி (Stella Creasy), கரன் லீ (Karen Lee), வெஸ் ஸ்ரிறீற்ரிங்க் (Wes Streeting), கரத் தொமஸ் (Gareth Thomas), சாரா சம்பியன் (Sarah Champion) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பத்து ஆண்டுகள் எட்டிய நிலையிலும் தமக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகிட்டாத நிலையில் தமிழர்கள் இருப்பதையிட்டு தனது கவலையை வெளியிட்ட தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், தமிழர்களுக்கு நீதி கிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் என்று குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்