புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் : மொஹமட் ரிஸ்வான் கைது

361shares

இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மொஹமட் ரிஸ்வான் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை வத்தளை - மாபொல பகுதியில் வைத்து பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மொஹமட் ரிஸ்வான் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவரிடம் இருந்து 05 கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மொஹமட் ரிஸ்வானை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க