சஹ்ரானின் டி.என்.ஏ அறிக்கை குறித்து வெளிவந்த செய்தி!!

1466shares

தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிம் தொடர்பிலான டி.என்.ஏ. பகுப்பாய்வு அறிக்கை அடுத்து வரும் மூன்று நாட்களில் நீதிமன்றிடம் கையளிக்கப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.

ஷங்ரில்லா ஹோட்டலில் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாஷிமின் தலைப்பகுதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் அது சஹ்ரான் தான் என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ. சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான உத்தரவு கோட்டை நீதிமன்றம் ஊடாக பிறப்பிக்கப்பட்டது.

இதற்காக சஹ்ரானின் மகள் மற்றும் சகோதரியிடம் இருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டு இருந்தன.

இந்த இரத்தமாதிரி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரிய முடிகின்றது.

இதையும் தவறாமல் படிங்க