சிறிலங்கா இராணுவச் சீருடையுடன் தோட்டாக்கள்; சுற்றிவளைத்த அதிரடிப்படை!

101shares

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஒருதொகை தோட்டாக்களும் இராணுவச் சீருடை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அனுராதபுரம் மாவட்டம் மட்டாடுகம, கிரலவ பாலத்துக்கு அருகில் வைத்தே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறிலங்கா இராணுவத்துக்குச் சொந்தமான சீருடையுடன் 12 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று கூறியுள்ள கெக்கிராவ பொலிஸார் மீட்கப்பட்ட பொருட்கள் தம்மிடம் அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க