பல அரசியல் வாதிகளுக்கு நான் உதவி செய்திருக்கிறேன்: மதூஷின் வாக்குமூலங்களால் கதிகலக்கத்தில் முக்கிய அரசியல்வாதிகள்!

1126shares

சக்திவாய்ந்த பல அரசியல் வாதிகளுக்கு நான் உதவி செய்திருக்கிறேன்.ஆனால் அவர்கள் எனக்கு உதவி செய்யத் தவறிவிட்டனர் என பாதாள உலக குழுத் தலைவர் மாக்கந்துரே மதூஷ் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்டு அங் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் மாக்கந்துர மதூஷ் தற்போது பொலிஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உள்ளார்.இதன்போது அவர் அரசியல்வாதிகளுடன் தனக்குள்ள உறவுகள் குறித்து தெரிவித்து வருகிறார். அவரின் இந்த வாக்குமூலங்ககள் முக்கிய அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்து வருகின்றன.

இந்த நிலையிலேயே பல அரசியல்வாதிகளுக்கு தான் உதவி செய்த விடயத்தை மதூஷ் தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகளுக்கு பண உதவி செய்தேன். மற்றும் சில அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் உதவி செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுடன் தனக்குள்ள தொடர்புகள் குறித்து மதூஷ் பெருமளவு தகவல்களை தெரிவித்து வருவதாகவும் இன்னும் பல தகவல்களை அவர் தெரிவிக்கவுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மாகாணத்திலுள்ள சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் பலர் மதூசுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

டுபாயில் மதூஷ் இருந்தவேளை சில அரசியல்வாதிகள் அங்கு சென்று பல்வேறு உதவிகளை பெற முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பாதாள உலககுழுத் தலைவர் மாக்கந்துரே மதூஷ் எதிர்காலத்தில் மேலும் பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துவார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

இதையும் தவறாமல் படிங்க