’இந்தியாவிலிருந்து வந்த ஒரு லட்சம் படைகளால்கூட விடுதலைப் புலிகளை வெல்லமுடியவில்லை’ மைத்திரி பேச்சு!

1895shares

இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலாக வந்த படைகளால்கூட தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்ல முடியாமல் போய்விட்டதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற இராணுவ வீரர்களுக்கான நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மைத்திரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

30வருட காலத்தில் யுத்தத்தில் உயிர்நீத்த முப்படையினருக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன் ஊனமுற்ற படையினருக்கு எனது நன்றியைக் கூறுகிறேன். அதேபோல் தற்போது கடமையாற்றும் அனைத்து படையினரையும் நான் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். கடந்த 10 வருடமாக படையினரை நாங்கள் நினைவு கூர்கிறோம். ஆனால் இவர்களின் குடும்பத்தவர்கள் 40 வருடங்களுக்கு மேலாக இவர்களை மனதில் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட படைகள் இந்தியாவிலிருந்து வந்தன. வெளி நாட்டுப் படைகள் வந்தன. ஆனா லும் புலிகளை வெல்ல முடியவில்லை. இறுதியில் எமது இராணுவத்தைக்கொண்டுதான் நாம் புலிகளை வென் றோம். வரலாறு அதுதான். கடைசியாக புலிகளின் தலைவரை கொன்று சுதந்திரம் அடைந்தோம்.

அப்படித்தான் கடந்த மாதமும் நாங்கள் பல உயிர்களை இழந்து பயங்கரவாதத்தை எதிர்கொண்டோம். இது இல ங்கை பிரச்சினையல்ல, சர்வதேச பிரச்சினை. இந்த சர்வதேச பயங்கரவாதத்தை எமது புலனாய்வுத்துறையினர் தமது அனுபவங்களை கொண்டு ஒழிக்க வேண்டும். அதற்கான தகுதி அவர்களுக்கு உண்டு.” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்