ஸ்ரீலங்காவில் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு?

189shares

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம், முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், அத்துடன் நாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலும்,பொதுத்தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் இந்த தேர்தல்களை ஒத்திவைத்துவிட்டு அவசரகால சட்டவிதிகளின்படி கண்காணிப்பு அரசாங்கமொன்றை நிறுவவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனை தொடர்பில் தமது பரிந்துரைகளை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, அவசரகால சட்டவிதிகளின்படி தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது.அதற்கு ஆதரவாக உயர்நீதிமன்றின் FR/512/1998 தீர்ப்பையும் அவர் எடுத்துக்காட்டினார்.

அத்துடன் இரண்டு தேர்தல்களையும் ஒத்திவைக்கவேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இதுவரை இந்த விடயம் தொடர்பாக எவரும் தன்னுடன் கலந்துரையாடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கு இரண்டு எளிய வழிகள் உள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதலாவது நாடாளுமன்றுக்கு delimitation அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது வர்த்தமானி மூலம் வெளியிடப்படவேண்டும்.இரண்டாவது 2020 ஆம் ஆண்டு கலப்பு வாக்களிப்புமுறை அமுல்படுத்தப்படவுள்ள திகதியை மாற்றுவதன் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.

அதன் பின்னர் தேர்தல்களை முன்னைய முறையின்படி நடத்தமுடியும் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கருத்துப்படி ஊவா மாகாணசபையும் கலைக்கப்பட்ட பின்னர் அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தமுடியும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்