யாழில் முக்கிய நபர் வீட்டில் பாகிஸ்தான் அகதிகள்! வெளியானது காணொளி ஆதாரம்!

2830shares

இரண்டாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் ஏப்ரல் 21ம் திகதி நாடு முழுவதும் பரவலாக இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குலின் பின் பாக்கிஸ்தான் பிரஜைகள் வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். அதில் ஒரு குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டது.

குறித்த குடும்பத்தினர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய திருச்சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த குடும்பத்தினை பொறுபு்பேற்றுள்ளதாக அவர் தொிவித்தார்.

குறித்த குடும்பத்தினை ஜ.நா பொறுப்பெடுக்கும் வரையில் ரட்ணஜீவன் கூல் தனது பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரட்ணஜீவன் கூல் தொிவித்தார். குறித்த குடும்பத்தில் கணவன் மனைவி உட்பட்ட நான்கு குழந்தைகளும் இவ்வாறு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இவா்கள் யாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விடயம் தொடா்பில் சபாநாயகா், பிரதி பொலிஸ்மா அதிபா், மற்றும் தோ்தல் ஆணைக்குழுவிற்கு தொியப்படுத்தியுள்ளதாகவும் ரட்ணஜீவன் கூல் தொிவித்தார்.

இலங்கையில் தஞ்சம் கோரி நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகளில் சிலர் வடக்கை நோக்கி அழைத்துவரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, யாழ்ப்பாணத்துக்கு நான்கு குடும்பங்களை சேர்ந்த 13 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டதன் பின்னரே யாழில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதி கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழில் உள்ள சில வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளே இவ்வாறு வடக்குக்கு தற்போது அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்று எமது ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவினர் நீர் கொழும்பு பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வவுனியாவுக்கு மட்டுமே 35 அகதிகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் வேறு எவரும் அழைத்துச் செல்லப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

அதேநேரம் யாழ்ப்பாண பொலிஸ நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது குறித்த அகதிகள் வந்தமை தொடர்பாக தாம் எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர்.

அது தொடர்பில் தமக்கு எதுவும் உறுதிப்படுத்திய தகவல் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க