இலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்!

250shares

இலங்கை மக்களை மாபெரும் அதிர்ச்சியில் உறைய வைத்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்றது.

மிலேச்சத்தனமும் கொடூரமுமிக்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட மக்களைக் காவுகொண்டது.

கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. குண்டு வெடிக்கத் தவறியதால் சில இடங்களிலிருந்து பயங்கரவாதிகள் பின்வாங்கிக்கொண்டதாக புலனாய்வுத்துறை கூறுகிறது.

குண்டுதாக்குதல் இடம்பெற்ற இடங்களாக,

  • கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்- காலை 8.45
  • நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம்- காலை 8.45
  • மட்டக்களப்பு சியோன் தேவாலயம் வேதகம சபை - காலை 8.45
  • சங்கரில்லா , சினமன், கிங்ஸ்பரி விடுதிகள் காலை-8.45
  • தெஹிவளை மிருகக்காட்சி சாலை அருகில் உள்ள விடுதியில் - மதியம் 1.45
  • தெமட்டகொட மேம்பாலம் அருகில் - மதியம் 2.15

இந்த நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூருமுகமாக நாடெங்கும் அஞ்சலில் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க