ஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை? தொடரும் கைதுகள்!

66shares

ஸ்ரீலங்காவில் கடந்த மாதம் 21ம் திகதி காலை, இலங்கையில் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் 3 ஹொட்டல்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தத் தாக்குதல்கள் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.

அதன்பின்னர் கடந்த மாதம் 26ம் திகதியும் சாய்ந்தமருது பகுதியில் மற்றுமொரு தற்கொலைத் தாக்குதல் சம்பவமும் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்தில் சஹ்ரானின் ததந்தை, சகோதரர்கள் உயிரிழந்ததோடு சஹ்ரானின் மனைவி மற்றும் 4 வயது மகள் ஆகியோர் காயமடைந்த மட்டக்களப்பு வைத்தியசாலையில் பொலிஸாரின் உயர் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனிடையே சங்கரி-லா ஹொட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியஇருவரில் ஒருவர் சஹ்ரான் என்றும் அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்து விட்டார் என்றும் ஆரம்பத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதன்பின்னர் சஹ்ரான் இறக்கவில்லை அவர் மன்னார் ஊடாக இந்தியா தப்பிச் சென்று விட்டார் என்று இராணுவத்தளபதி தகவல் வெளியிட்டிருந்தார்.

அதனை உறுதி செய்வதற்காக சஹ்ரானின் சகோதரி மற்றும் மகள் ஆகியோரிடம் மரபணுப் பரிசோதனை மேற்கொள்வதற்காக கொழும்பு அழைத்து வரப்பட்டு மரபணு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தலைமை தாங்கி நடத்திய தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹஷீமின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேர் நேற்றைய தினம் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான அமைப்பாளர் கல்முனை சியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கல்முனை சியாம் என்பவரே, கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு, சஹ்ரானின் தந்தை உள்ளிட்டவர்களை அழைத்து செல்ல உதவி புரிந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயிற்சிகளையும் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் வகையில் குருநாகல் - அலகொலதெனிய பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட முகாம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள தென்னை மரங்கள் நாட்டப்பட்ட காணி ஒன்றை பயிற்சி முகாமாக பயன்படுத்தி வந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் முன்னதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கமைய நாடாளுமன்ற மொழிப்பெயர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க