அரச இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதலையடுத்து உடனடியாக அமுலுக்கு வந்த விசேட வேலைத் திட்டம்!

43shares

சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சில தூதரகங்கள் மீது சைபர் தாக்குதல் ஒன்று கடந்த ஞாயிற்று கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இணையத்தளங்கள் இரண்டு நாட்கள் முடங்கின.

இந்த தாக்குதல்களை தமிழீழ சைபர் படை அணி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசினை அச்சம் கொள்ளவைத்துள்ளது.

அத்துடன் இலங்கைக்கான குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட, நாட்டின் 13 இணையத்தளங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் தென்னிலங்கையிலும் சிங்கள ஊடகங்களிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

இதனையடுத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்