ரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம்? பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்? செய்தி தொகுப்பு

330shares

நம்பிக்கையில்லா பிரேரணைக்கெதிராக வாக்களிக்குமாறு அமைச்சர் ரிஷாட் தரப்பால் பேசப்பட்ட பெருந்தொகை பணப்பேரத்திற்கு சம்மதம் தெரிவித்து றிஷாட் பதியூதினுக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் சம்பவங்களையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி, வர்த்தகம் கைத்தொழில் கூட்டுறவு மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சர் றிஷாட் பதியூதினுக்கும் குண்டு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என பலதரப்பாலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் றிஷாட் பதியூதினுக்கெதிராக பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரிகளுடன் தொடர்பு இருப்பதான குற்றச்சாட்டு உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு பிரிவுகள், மஹிந்த ஆதரவு அணி உள்ளிட்ட அனைவரும் ஆதரவளித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கவிருக்கும் நிலையில் கூட்டமைப்பின் தலைவர் உட்பட்ட பலர் குறித்த பிரேரணையை ஆதரிக்க போவதில்லை எனவும் சிலர் ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்