ஜனாதிபதியின் அதிவிசேட அறிவிப்பு: நீடிக்கப்பட்டது அவசரகால நிலைமை!

172shares

இலங்கையில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலைமை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பினை அடிப்படையாகக்கொண்டும் அமைதியினை நிலைநாட்டும்பொருட்டும் தனக்கிருக்கின்ற விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அவசரகால நிலைமையினை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதாக விசேட வர்த்தமானியினை அவர் விடுத்துள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் 21ஆம் நாள் நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களையடுத்து உடன் அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ்வரும் அவசரகால நிலைமை (State of Emergency) அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டு ஒரு மாதமே செல்லுபடியாகும் நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க