பொதுபலசேனா பொதுசெயலாளர் ஞானசார தேரர் விடுதலை?

314shares
Image

நீதிமன்றத்தைஅவமதித்த குற்றத்திற்காக ஆறு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்ட சிங்கள பௌத்தபேரினவாத அமைப்பான பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைவெறும் பத்துமாதங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்த நிலையில் பொது மன்னிப்பின் கீழ்விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்காவின்குடியரசு தினமான இன்றையதினம் ஸ்ரீலங்காவின் அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேனவினால் ஞானாசார தேரரருக்கு விஷேட பொது மன்னிப்பு வழங்கும் உத்தரவு அடங்கியஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் பரவியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தத் தகவலைஇதுவரை ஜனாதிபதி ஊடகப் பிரிவோ - ஜனாதிபதி செயலகமோ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனினும் சிறைச்சாலை ஆணையாளர் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனியவிடம் ஐ.பீ.சீ தமிழ் தொடர்புகொண்டபோது, தங்களுக்கு அவ்வாறான ஆவணத்தில் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி ஞானாசார தேரருக்கு பொது மன்னிப்புவழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுபல சேனா அமைப்பினர் தெரிவித்தனர்.

இதேவேளைமுஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இனவாதத்தை தூண்டிவந்தவராகவும், நீதித்துறைக்கும் - பொலிஸாருக்கும்அவர்களது கடமைகளை செய்யவிடாது தொடர்ச்சியாக இடையூறு இழைத்துவந்ததாக குற்றச்சாட்டுசுமத்தப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்புவழங்கப்படுவதானது நீதித்துறையின் சுதந்திரத்துக்குக் கொடுக்கப்படும் பலத்த அடி எனஜனாதிபதி சட்டத்தரணி ஜே.கிருஷாந்த வெலியமுன கண்டனம் வெளியிட்டுள்ளார்.

எந்தவொருநாகரிகமான தேசமும் இத்தகைய ஒரு குற்றவாளியை மன்னிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளஅவர் 19 வது திருத்தச் சட்டத்தில் மன்னிப்புக்கான ஜனாதிபதி அதிகாரமானதுநீதித்துறையின் பரிசீலனைக்கு உட்பட்டது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சிறிலங்காவில்வாழும் சிறுபான்மையின சமூங்களுக்கு எதிராகக் குறிப்பாக முஸ்லீம் சமூகத்திற்குஎதிரான இன வன்முறைகளைத் தூண்டிவிடுவதாக குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளஞானாசார தேரருக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

எனினும்சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மே மாதம் 19 ஆம் திகதி வெலிக்கடைசிறைச்சாலைக்கு சென்றிருந்த போது கலகொடஅத்தே ஞானாசார தேரரை வெலிக்கடைசிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலையில் வைத்து சந்தித்திருந்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலமைகள் குறித்தும் அவரதுவிடுதலை தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளர் உட்பட முக்கியஸ்தர்களான பௌத்த பிக்குகளும் நேற்றுமுன்தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேரில் சென்று அவர்களது அமைப்பின் பொதுச்செயலாளரை சந்தித்தித்திருந்ததோடு, கலகொட அத்தே ஞானசார தேரரை விதலை செய்வதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசமொன்றையும்விதித்திருந்தனர்.

இந்த நிலையில் மேமாதம் 22 ஆம் திகதியான இன்றைய தினம் சிறிலங்கா ஜனாதிபதியின் பிரதிநிதியான மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்பிரதிநிதியாக அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றஞானாசார தேரரை சந்தித்திருந்தனர்.

இந்தசந்திப்பின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர்ஆகியோரின் பிரதிநிதிகளான அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகதொடர்ச்சியாக குரல்கொடுத்த ஞானாசார தேரரை விடுதலை செய்ய வேண்டியது அவசியம் என்றும்வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க