துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி பலி!

268shares

அக்குரஸ்ஸ, ஊருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந் துள்ளார்.

உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.

சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது காயமடைந்நத பொலிஸ் அதிகாரியே உயிரிழந்வராவார்்

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர்கள் ஊருமுத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக அக்குரஸ்ஸ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க