இந்துகுடி மக்களே இலங்கையின் பூர்வீக குடிகள் -முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டு

56shares

இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர்.

தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன்.

சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்.

அந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்று வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படும் பௌத்த எச்சங்களாகும்.

அவை தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த எச்சங்களாகும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின 'தெமளபௌத்தயோ' அதாவது தமிழ் பௌத்தர்கள் என்ற நூலை சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார்.

தமிழர்கள் பௌத்தர்களாக ஒருகாலத்தில் வாழ்ந்து வந்தமை பற்றி அந்த நூலில் அவர் ஆராய்ந்துள்ளார்.

'தெமளபௌத்தயோ' காலக்கிரமத்தில் பௌத்ததைக் கைவிட்டு இந்து சமயத்தை மீண்டும் தழுவினர்.

சிங்கள மொழியானது கிறிஸ்துவுக்கு பின் 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டிலேயே நடைமுறைக்கு வந்தது.

அதற்கு முன்னர் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் பாளிமொழியிலேயே எழுதப்பட்டது.

அப்போது சிங்கள மொழி பிறக்கவில்லை.

இந்த நாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியை அத்திவாரமாக வைத்து அதன் மேல் பாளிமொழியினால் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த மொழியே சிங்கள மொழியாகும்.

பாளிமொழியில் சிகல என்றால் சிங்கம்.

முதன் முதலில் சிகல என்ற சொல் கிறிஸ்துவுக்கு பின் 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளின் படைப்பான பாளி மொழியில் வெளிவந்த தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது

சிங்கள மொழியோ அல்லது சிங்கள இனமோ இந்த இரண்டு பாளிமொழி நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், துட்டகைமுனுவை சிங்கள அரசன் என்று குறிப்பிடுவது தவறானது.

எல்லாளன் இந்துத் தமிழன் துட்டகைமுனு பௌத்த தமிழன் என்பதே உண்மையாகும்.

எனவே, சரித்திர ரீதியாகப் பார்த்தால் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் இலங்கையில் ஆதியில் குடிகொண்டிருந்தவர்கள் தமிழ் மொழி பேசிய இந்துக்கள் என்பதையும் விட சைவ சமயிகளே என்று கூறினால் அதுவே பொருத்தமானது.

இதனால்தான் வடகிழக்கை இணைத்து தமிழ் மக்களின் தாயகப் பகுதியை அடையாளப்படுத்தி, அதற்கென ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் சுயாட்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுவருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கட்டமைப்பினுள் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகை ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டு வருகின்றோம்.

அவ்வாறான ஒரு அரசியல் தனித்துவம் வழங்கப்பட்டால், தமிழர்களின் அலகு சமயச் சார்பற்ற ஆனால் எல்லா சமயங்களையும் சமமாகக் கருதும் ஒரு அலகாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!