வற்றாப்பளையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த காட்சி!

650shares

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இம்முறை வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

குறிப்பாக கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் ஒன்று கூடுவதற்கு அச்சப்படும் நிலையில், சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வழமையாக வருகை தருகின்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு பலத்த பாதுகாப்பின் மத்தியில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக வெளியிடங்களில் இருந்து தூக்குக் காவடி எடுத்து ஆலய வளாகத்தில் வர முடியாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக சில ஆண்டுகளாக தனது நேர்த்திக் கடன்களை செய்து வருகின்ற பெண் அடியவர் ஒருவர் இம்முறையும் தூக்குக் காவடி எடுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது

இதனை மக்கள் விசேடமாக உற்றுநோக்கியதோடு இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்டு புகைப்படங்கள் எடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இதையும் தவறாமல் படிங்க