முக்கிய கட்சிகளை வீழ்த்தி மாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கும் மக்கள் நீதி மய்யம்?

571shares

இந்திய அளவில் நடைபெற்று முடிந்த மக்களவைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாவது இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அத்துடன் அ.ம.மு.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை விட மக்கள் நீதி மய்யம் முன்னிலை வகிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி தொடங்கி கடந்த 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!