தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனவாத ரீதியில் செயற்படும் ஹிஸ்புல்லா ; சுட்டிக்காட்டிய முன்னாள் எம்.பி!

400shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உண்மையில் நிரபராதிகள் என்றால் அவர்கள் முதலில் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகி விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், நாட்டின் அரச தலைவரான ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குறுகிய அரசியல் லாபங்களைக் கருதி செயற்படாது மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பித்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் ஆசிரியர்களை அதிரடியாக முஸ்லீம் பாடசாலைகளுக்கு இடமாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகள் அவர் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத ரீதியில் செயற்படுவதை கைவிடவில்லை என்பதையே நிரூபிப்பதாகவும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!